தமிழ் சினிமாவில் வெற்றி நடிகராக வருவர் அஜித். இவர் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார். தன்னை பற்றி நல்ல விமர்சனம் வந்தாலும் கெட்ட விமர்சனம் வந்தாலும் அதற்கு பெரிதாக ரியாக்ட் ஆகாமல் இருக்கக்கூடியவர். துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படமான விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் அஜித் பற்றி பேசியது பலருக்கும் கோபத்தை கொடுத்திருக்கிறது.. அவர் சொன்னது என்னவென்றால்.. ஒரு இடத்தில் வேலை செய்யும் போது நண்பர்களாக பழகுவதில் என்ன தப்பு இருக்கிறது அப்படித்தான் எங்க தலைவர் வடிவேலு அஜித் பெயரை சொல்லி கூப்பிட்டு இருக்கிறார்.
ஆனால் அதற்கு அவர் ஈகோ பார்த்து இருக்கிறார். அஜித் ஒன்றும் வயதானவர் கிடையாது வடிவேலுவைவிட சிறியவர்தான் அப்படி இருக்கும் போது பெயர் சொல்லிக் கூப்பிடுவதில் என்ன தப்பு இருக்கிறது? இதனால் தான் வடிவேலுவை படத்தில் கமீட் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல் அஜித் ஒரு பப்ளிசிட்டி மன்னன் தான் செய்யும் உதவிகள் பிறருக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே செய்வார் எந்த பொது நிகழ்ச்சிகளும் கலந்து கொள்ளாத இவர் தன் போட்டோவை மட்டும் வெளியிட்டு பப்ளிசிட்டி தேடிக் கொண்டிருக்கிறார் என தாறுமாறாக அஜித்தை பற்றி பேசுகிறார். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் டெலிபோன் ராஜை விமர்சித்து வருகின்றனர்.
அஜித் தன்னுடைய போட்டோவை பப்ளிசிட்டி செய்யவில்லை.. அஜித் ரசிகர்கள் தான் அவருடன் எடுத்த போட்டோவை பப்ளிசிட்டி செய்கிறார்கள் அதை நீங்கள் முதலில் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என கூறுகின்றனர் மேலும் ஒரு இடத்தில் வேலை செய்யும் போது நல்ல பழக்கம் ஏற்படும் அதற்காக நீங்கள் வடிவேலுவை பெயர் சொல்லி அழைத்து விடுவீர்களா வருகின்றனர்.