சென்னையில் மிக பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்தான் தொழிலதிபர் ராஜா இவர் சென்னை மட்டுமின்றி திருச்சி போன்ற பல்வேறு இடங்களில் மால்கள் மற்றும் மார்க்கெட்டுகள் உள்ளது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் மாதத்திற்கு பல கோடி ரூபாயை வருமானமாக பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பைனான்சியர் என்று தங்களை அறிமுகம் செய்துகொண்டு ரமேஷ் மற்றும் கார்த்திக் என்ற இருவரும் தொழிலதிபர் ராஜாவுடன் மிக நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள் மேலும் பைனான்ஸ் மூலமாக வாழ்க்கை ஜாலியாக இருக்கும் என அவரிடம் ஆசையை தூண்டி உள்ளார்கள்.
அந்தவகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிறந்தநாள் விழா என்று கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் தொழிலதிபர் ராஜாவை வர வைத்தார்கள். மேலும் அந்த பார்ட்டியில் பிரபல தொழிலதிபர்கள் மட்டுமின்றி பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டுள்ளார்கள்.
மேலும் இந்த பார்ட்டியில் ராஜா அளவுக்கு அதிகமாக மது அருந்தியதன் காரணமாக சுயநினைவு இன்றி இழந்ததை பயன்படுத்திக்கொண்ட கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் துணை நடிகைகளை அவருடன் வைத்து மோசமாக வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள்.
இவ்வாறு எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை ராஜாவிடம் காட்டி இரண்டு கோடி ரூபாய் பணம் தராவிட்டால் இந்த வீடியோவை உங்கள் குடும்பத்தாரிடம் காட்டுவோம் என மிரட்டியது மட்டுமில்லாமல் இணையத்தில் வெளியிடுவோம் என பேசி உள்ளார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா 50 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனாலும் அவர்கள் விடவில்லை இரண்டு கோடி ரூபாய் கேட்டு மறுபடியும் மிரட்டியதன் காரணமாக நமது தொழிலதிபர் காவலர் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதன் மூலமாக தற்போது ராஜேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் கைதானது மட்டுமில்லாமல் அவர் களிடமிருந்து மொபைல் மற்றும் வீடியோ ஆகியவற்றை பறிமுதல் செய்ய முயற்சி செய்து வருகிறார்கள்.