தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருந்து வருகிறார். இவர் பெரிதும் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ஆக்சன் திரைப்படங்களாக இருந்தாலும் அவரது படங்கள் மிக பிரம்மாண்ட ஒரு வெற்றியை ருசிக்கின்றன இதனால் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும் அவர் வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் சுமார் 230 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது
அதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக உருவாகி வருகிறது முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாவது கட்டப்பட பிடிப்பு வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது
வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என திட்டவட்டமாக கூறியுள்ளது படக்குழு. இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து குஷ்பூ, ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் இருந்து இதுவரை பஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ஆகியவை வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து இழுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய செய்திகள் அடிக்கடி இணையதள பக்கத்தில் வைரலாகி வருகின்றன அப்படி பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிகர் விஜய் குறித்து பேட்டி ஒன்றில் பேசி உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது. விஜய் உடன் ஒரு விளம்பர படத்தில் நடித்திருந்தேன் அதன் சூட்டிங் ஊட்டியில் நடைபெற்றது. சூட்டிங் ஸ்பாட்டில் நான் சேரில் உட்கார்ந்து மொபைல் நோண்டிக் கொண்டிருந்தேன்
அவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்தது தெரிந்தது. அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மொபைல் நோண்டிக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து பார்த்தால் விஜய் அருகில் நின்று கொண்டிருந்தார் என்னவென்று பார்த்தால் எனக்கு பாய் சொல்வதற்காக தான் அவ்வளவு நேரம் நின்று இருந்தார் என தெரிய வந்தது மிகப்பெரிய ஒரு சாராக இருந்தாலும் விஜய் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மிக எளிமையாக சக நடிகர் நடிகைகளுடன் பழகினார் அது எனக்கு வியப்பை கொடுத்தது என கூறினார்.