ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காத்ரீனா கைப் இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் விக்கி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு இவர்களுடைய திருமணம் ராஜஸ்தானில் கோலாகலமாக நடைபெற்று உள்ளது.
அதுமட்டுமில்லாமல் இவர்கள் திருமணத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது அந்த வகையில் அவருடைய திருமணத்திற்கு வரும் விருந்தாளிகள் பலருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
அந்தவகையில் வெறும் 120 பேர் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த திருமணத்தில் கேமரா மொபைல் போன்ற எந்த ஒரு செயலிகளையும் கொண்டு வர அனுமதி கிடையாது.
மேலும் தன்னுடைய முன்னாள் காதலர்களை கேத்ரினா கைப் திருமணத்திற்கு அழைக்க வில்லை என்றாலும் அவர்கள் இருவரும் பல கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார்கள்.
அந்த வகையில் நடிகர் சல்மான் கான் அவர்கள் மூன்று கோடி மதிப்புடைய ரேஞ்ச் ரோவர் காரை கத்ரினா கைப்க்கு பரிசாக கொடுத்துள்ளார் அதேபோல உனக்கு குறைந்தவன் நான் கிடையாது என்ற பழமொழிக்கு ஏற்ப ரன்பீர் கபூர் 2.7 கோடி மதிப்பிலான வைர நெக்லஸை பரிசாக கொடுத்துள்ளார்.
என்னதான் காதல் முறிந்தாலும் தன்னுடைய முன்னாள் காதலிக்காக இவர்கள் இப்படி பரிசு கொடுத்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டது. இவ்வாறு வெளிவந்த தகவலை ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாகி வருகிறார்கள்.