Gossips : சினிமாவில் மட்டுமல்லாமல் எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது ஆனால் சமீப காலமாக சினிமாவில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் தங்களுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்க்கிறார்கள். அப்படிதான் பிரபல பாடகரின் மகனான ஒருவர் பாடகராக மட்டுமல்லாமல் நடிகராகவும் நடித்துள்ளார் அதிலும் ஒல்லி நடிகரின் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
மேலும் அந்த நடிகர் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அவரும் பதில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்களை சில விஷமிகள் தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் இந்த ஆசைக்கு பலர் பலியாடாக மாறி விடுகிறார்கள்.
ஆனால் இந்த மோசமான சம்பவம் குறித்து பேசுவதற்கு பயப்படுவார்கள் கிடைத்த வாய்ப்புகள் போய்விடுமோ என பயந்துதான் பலர் வெளியே சொல்லாமல் இருக்கிறார்கள் அதேபோல் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை வெறும் பெண்களுக்கு மட்டும் கிடையாது ஆண் நபர்களுக்கும் இந்த மாதிரி பிரச்சனை இருந்து வருகிறது ஆனால் இந்த விஷயத்தில் பெண்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
ஆண்களுக்கு நடக்கும் அந்தரங்க பிரச்சனைகளை வெளியே யாரும் சொல்வது கிடையாது வணிகம் கம்பெனி என பல துறைகளில் இந்த பிரச்சனை இருந்து வருகிறது. இப்படிதான் ஒரு புகாரை பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒருவர் பொது மேடை என்று கூட பார்க்காமல் சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி வெளிப்படையாக பேசினார்.
இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்.. லிஸ்டில் இடம் பிடித்த இந்திய படங்கள்
அதாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு திரைத்துறைக்கு நுழைந்தார் அப்பொழுது வருமானத்திற்காக சில கிடைத்த வேலைகளை செய்து வந்தார். அப்பொழுது தான் ஒரு தயாரிப்பாளரை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்றார் ஆனால் அந்த தயாரிப்பாளர் கட்டியிருந்த நாயை அவிழ்த்து விட்டு வேடிக்கை பார்த்தார். மேலும் அதேபோல் இன்னொரு நபர் இருட்டான இடத்திற்கு வர சொல்லி தவறாக நடந்து கொண்டார் இப்படி ஆண்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது என அந்த நடிகர் கூறி உள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.