தற்பொழுது உள்ள சிறு வியாபாரிகள் வங்கிகளில் தரும் லோன் மூலமாகத்தான் தங்களது தொழிலையும், வாழ்க்கையையும் ஓட்டி வருகின்றனர். ஏனென்றால் வங்கியில் வாங்கினால் தான் வட்டி குறைவாக இருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றாகும்.
கொரோனா காரணமாக தற்போது சிறு தொழில்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றது. இந்த நிலையில் பெருபலான நிறுவனங்களுக்கும், சிறு வியாபாரிகளும் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது உள்ள சிறு வியாபாரிகள் மற்றும் தினக்கூலிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அல்லாடி வருகின்றனர்.
இந்த வகையில் ஹரியானா மாநிலம் குருஷேத்ரா பகுதியில் டீக்கடை நடத்தி வரும் சிறு தொழிலாளி ராஜ்குமார் என்பவர் குறைந்த தொகையை கடனாக வழங்க கோரி அங்குள்ள வங்கியே சென்றுள்ளார் அங்குள்ள அரசு அதிகாரிகள் நீங்கள் ஏற்கனவே வாங்கிய 50 கோடி ரூபாய் எப்பொழுது தருவீர்கள் என கேட்டுள்ளார்கள்.
இதனைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் என்னை நம்பி எப்படி 50 கோடி ரூபாய் தருவார்கள் என் பெயரை சொல்லி வேறு யாரோ பணத்தை வங்கியில் இருந்து வாங்கிக் கொண்டார்கள் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
இதனால் டீ கடை காரர் மிகவும் வேதனையில் மனுஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.