தமிழ் சினிமாவில் பல்வேறு காதல் ஜோடிகள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் இவர்களுக்குள் காதல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்கள் ஒன்றாக இணைந்து திரைப்படம் நடிக்கும் பொழுது ஏற்படும் நெருக்கம் தான். அந்த வகையில் காதல் வசப்பட்டு நடிகர்களால் கழட்டி விடப்பட்ட நடிகைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
சினேகா இவரை தமிழ் சினிமாவில் பலரும் புன்னகை அரசி என போற்றி வருகிறார்கள் அந்த வகையில் இவர் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்தது மட்டும் இல்லாமல் இவர் நடிகர் ஸ்ரீகாந்த் உடன் காதலில் இருந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். இவ்வாறு இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படத்தின் மூலம் தான்.
மேலும் இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் இவர்களுக்கு மிக விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் பல்வேறு செய்திகள் இணையத்தில் வெளிவந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சிம்ரன் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த நடிகை என்று சொல்லலாம் அந்த வகையில் இவருடைய நடனத்திற்கும் நடிப்பிற்கும் மயங்காத ரசிகர்களே கிடையாது அதேபோல நமது நடிகை ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கி உள்ளது நம் அனைவருக்கும் தெரிந்த நிலையில் பஞ்சதந்திரம் திரைப்படத்தின் மூலமாக கமலுடன் இவர் காதலில் இருந்தது பலருக்கும் தெரிந்த நிலையில் அவை நாளடைவில் மறைந்து விட்டன பின்னர் சிம்ரன் பிரபல நடன இயக்குனர் ராஜி சுந்தரத்தை காதலித்து வந்ததை தொடர்ந்து தன்னுடைய நெடுங்கால நண்பரை திருமணம் செய்து கொண்டார்.
அஞ்சலி தமிழில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் அந்த வகையில் இவர் நடிகர் ஜெய்வுடன் காதலில் ஈடுபட்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அது மட்டும் இல்லாமல் இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என சமூக வலைதள பக்கத்தில் வெளிவந்த செய்தியை தொடர்ந்து இருவரும் தங்களுடைய காதலை பிரேக் அப் செய்து கொண்டார்கள்.
ஐஸ்வர்யா ராய் உலக அழகி என போற்றப்படும் நமது நடிகைக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது மட்டுமில்லாமல் தமிழிலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது அந்த வகையில் நமது நடிகை முதல் முதலாக சல்மான் கானை காதலித்து வந்ததாக வெளிவந்த செய்தியை தொடர்ந்து பிரேக் அப் செய்து கொண்டு பிறகு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.
நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என கருதப்படும் நமது நடிகை சிம்புவுடன் காதலில் நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இதனை தொடர்ந்து நமது நடிகை சிம்புவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டவுடன் பிரபுதேவா உடன் காதலில் பின்னர் அந்த காதலும் தோல்வி அடைய இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
நடிகை நக்மா இவர் தமிழ் சினிமாவில் கிளாமர் குயினாக வலம் வந்தவர் அந்த வகையில் இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து வந்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அது மட்டும் இல்லாமல் சரத்குமார் தனது மனைவியை விவாகரத்து செய்தது நக்மாவுக்காக தான் என பலரும் கூறி வருகிறார்கள் அதன் பிறகு நக்மா மற்றும் சரத்குமார் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக பிரிந்து விட்டார்கள்.