ரசிகர்கள் கோயில் கட்டி கொண்டாடிய பிரபல நடிகைகள்..! அடேங்கப்பா லிஸ்ட் எங்கேயோ போகுதே..!

actress
actress

தமிழ் சினிமாவில் எவ்வளவோ நடிகர்கள் நடிகைகள் இருக்கிறார்கள் அந்த வகையில் ரசிகர்களுக்கு அனைவரையும் பிடிக்கிறதா என்றால் அது கிடையாது.அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட பிரபலங்கள் மட்டுமே ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்கள்.

இப்படி தீவிர ரசிகர் கூட்டத்தை திரட்டிய நடிகைகள் தென்னிந்திய சினிமாவில் பலர் இருந்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் அவர்களுடைய ரசிகர்கள் தங்களின் நடிகைக்கு கோயில் கட்டி கொண்டாடி வருவது வழக்கமாக உள்ளது. இந்த அளவிற்கு பிரபலமான நடிகைகளைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

நடிகை குஷ்பூ சுந்தர் இவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகை குண்டாக இருந்தாலும் அழகு தான் என்பதை தெரிவிக்கும் வகையில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு ரசிகர்கள் கோயில் கட்டி கொண்டாடியது மட்டும் இல்லாமல் கும்பாபிஷேகம் செய்து மிக பிரபலமாக வரவேற்று உள்ளார்கள்.

நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நமது நடிகை குஷ்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் இவருக்கு திருச்சி அருகே கோயில் கட்ட ரசிகர்கள் ஏற்பாடு செய்தார்கள் ஆனால் ஹன்சிகா வேண்டுகோள் விடுத்த காரணமாக இந்த கோயில் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

நடிகை நமிதா இவருக்கு அறிமுகம் என்று ஒன்றும் தேவையில்லை ஏனெனில் அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் மிகப் பிரபலமாக வலம் வந்த கவர்ச்சி நடிகை என்று சொல்லலாம்.இவ்வாறு பிரபலமான நமது நடிகை திருமணமாகி தற்போது செட்டில் ஆகி இருந்தாலும் நெல்லை அருகே இவருக்கு ரசிகர்கள் கோயில் கட்டி கொண்டு உள்ளார்கள்.

நயன்தாரா இவர் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருகிறார் அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அனைத்து நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்தது மட்டுமில்லாமல் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அதுமட்டுமில்லாமல் மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்கு பிறகு ஆக நயன்தாராவை அனைவரும் கோயில் கட்டி கொண்டாடியது மட்டும் இல்லாமல் அம்மனாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நிதி அகர்வால் இவர் தமிழ் சினிமாவில் இரண்டு திரைப்படங்களில் மட்டும் நடித்து இருந்தாலும் இந்த 2 திரைப்படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நமது நடிகை சென்னையில் உள்ள பெருமளவு ரசிகர்களை கவர்ந்து விட்டார் அந்த வகையில் சென்னையில் நிதி அகர்வாலுக்கு சிலை வைத்து பால் அபிஷேகம் செய்தது மறக்க முடியாத நிகழ்வு ஆகும்.