பொதுவாக நம் தமிழர்களுக்கு தீபாவளி பண்டிகைகள் என்பது மிகவும் பிடித்த வகையாக அமைந்துள்ளது ஏனெனில் இந்த பண்டிகையில் இனிப்புகள் பட்டாசுகள் புத்தாடைகள் என கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம் தான். அந்தவகையில் பிரபலங்களும் புது ஆடைகளை அணிந்துகொண்டு இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.
இதில் மங்களகரமாக மஞ்சள் நிற உடை அணிந்து தீபாவளி கொண்டாடிய நடிகைகளை பற்றி பார்ப்போம்.
நடிகை சினேகா இவரை புன்னகை இளவரசி என ரசிகர்கள் தூக்கி கொண்டாடி வருகிறார்கள் இவ்வாறு பிரபலமான நமது நடிகை நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தீபாவளி பண்டிகையன்று தான் மட்டும் இன்றி தன்னுடைய குடும்பத்துடன் மஞ்சள் நிற உடை அணிந்து கொண்டு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்கள்.
நடிகை மீனா தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பிறகு கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்து கலக்கி வந்த அவர் தான் மீனாவிற்க்கு கவர்ச்சி என்று சொன்னால் அவருடைய கண்கள் தான் அந்த வகையில் அவர்களுடைய கண்களுக்கு மயங்காத ஆண்களே கிடையாது.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவ்வாறு வெகு காலம் கழித்து திரைப்படத்தில் re-entry கொடுத்ததன் காரணமாக ரசிகர்கள் இதனை கொண்டாடி வருவது மட்டுமல்லாமல் தீபாவளியை முன்னிட்டு நடிகை மீனா மஞ்சள் நிற புடவை அணிந்து கொண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் மேலும் அதனுடன் தீபாவளி வாழ்த்து தெரிவித்தது அதுமட்டுமல்லாமல் அண்ணாத்த தீபாவளி கொண்டாட ரெடியா என பதிவிட்டிருந்தார்.
நடிகை அமலாபால் இதுவரை பார்த்த நடிகைகள் பலரும் புடவை மட்டும் அணிந்துகொண்டு புகைப்படம் வெளியிட்டு இருந்தார்கள் ஆனால் நமது அமலாபால் கொஞ்சம் வித்யாசமாக மாடல் உடை அணிந்து கொண்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார். நமது நடிகை ஆடை திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் இதுவரை நடிக்கவில்லை இந்நிலையில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை சாய் பல்லவி விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் அதன்பிறகு கதாநாயகியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து தன்னை பலப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் நமது நடிகை தீபாவளியை கொண்டாடும் வகையில் தன்னுடைய குடும்பத்தார் அனைவரும் மஞ்சள் நிற உடை அணிந்து கொண்டு சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு உள்ளார்கள்.