தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் நடிகர் தான் ரஜினிகாந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் 60 வயதுக்கு மேல் ஆனாலும் இன்று வரை திரையில் எப்படி முகம் காட்டினார் அதேபோலதான் இருந்து வருகிறார் அந்த வகையில் இவருடைய நடிப்பில் உருவாகும் ஒவ்வொரு திரைப்படமும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் அண்ணாத்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என நினைத்த நிலையில் ஓரளவு வெற்றியை பெற்ற நிலையில் அடுத்ததாக சன் பிச்சர் தயாரிப்பு நிறுவனத்தில் நெல்சன் இயக்கும் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இவர் இதற்கு முன்பாக நடித்த காலா என்ற திரைப்படத்தைப் பற்றிய ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடித்திருப்பார்.
இவர் தமிழ் சினிமாவில் சிம்மராசி போன்ற பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பின்னர் சினிமாவில் இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காததால் காரணமாக ஒரு சில சீரியல்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டி வந்தார்.
ஆனால் காலா திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகியாக நடிக்க இருந்தது நடிகை சுகன்யா தான் இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தது மட்டுமில்லாமல் ஒரு நேரத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்தார்.பின்னர் அவருக்கு காலா திரை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது ஆனால் அவர் பிராமின் என்ற ஒரே காரணத்தினால் இயக்குனர் பா ரஞ்சித் அவரை இந்த திரைப்படத்தில் நடிக்க வைக்கவில்லை.
அதன்பிறகு ஈஸ்வரி ராவ் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்கள் இதற்கு முக்கிய காரணம் சுகன்யா உயர்ந்த ஜாதி என்பது தான் என பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.