ரஜினியுடன் ஜோடி சேர மறுத்த பிரபல நடிகை.! ஏமாந்துபோன நெல்சன் – தலைவரின் 169 படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா..

rajini
rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார் இவர் கடைசியாக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவான ஒரு கதையாக இருந்தது.

இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், அபிமன்யு,  சூரி மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர் ஆனால் இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று ஓரளவு நல்ல வசூலை அள்ளியது. அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாக பல்வேறு சிறந்த இயக்குனர்களும் கதையை கேட்டார்.

குறிப்பாக இயக்குனர் பால்கி, வெங்கட்பிரபு, தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ் போன்றவர்களிடம் கேட்டு இருந்தாலும் நெல்சன் சொன்ன கதை தான் ரஜினிக்கு ரொம்ப பிடித்து இருந்தது. ரஜினியின் 169 வது படத்தை நெல்சன் எடுப்பதை திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனமும் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்க இருப்பதாக கூறப்பட்டது இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் எனவும் சொல்லப்பட்டது.

ஆனால் இந்த படத்தை எடுப்பதற்கு முன்பாக  நெல்சன் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை எடுத்தார் ஆனால் படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓரளவு வசூலை அள்ளியது ஆனால் இது ரஜினிக்கு  சரிப்பட்டு வரவில்லை இதனால் ரஜினி இயக்குனர் மாற்றி உள்ளார் என்ற பேச்சுக்கள் எல்லாம் அடிபட்டது. ஆனால் ரஜினி அது எல்லாம் வதந்தி என கூறி அதற்கு முடிவு கட்டினார். உறுதியாக ரஜினியும், நெல்சன்னும் உள்ளனர்.

aishwarya rai
aishwarya rai

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல மாடல் அழகி ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்தது. ஆனால் ஐஸ்வர்யாராய் மறுத்துவிட்டார் அதனைத் தொடர்ந்து ரஜினிக்கு ஜோடியை தேடி வருகிறார் இயக்குனர் நெல்சன்.