கன்னடப் பைங்கிளியான ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்து தொடர்ந்து காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து தொடர் வெற்றிகளை கொண்டதன் காரணமாக இவருக்கு ரசிகர்கள் கிடுகிடுவென உயர ஆரம்பித்தனர். மேலும் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பும் சிறப்பாக இருந்த காரணத்தினால் தற்போது தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அடுத்தடுத்த படங்களில் புக் செய்து வருகின்றனர்.
தெலுங்கு சினிமாவையும் தாண்டி நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு தமிழிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் அதேசமயம் வாய்ப்பும் கிடைத்தது அந்த வகையில் கார்த்தியுடன் கைகோர்த்த சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்தர். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறாததால் தமிழில் அடுத்த படம் நல்ல படமாக கொடுக்க தற்பொழுது சிறப்பான கதைக்காக காத்து கொண்டிருக்கிறார் இருப்பினும் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அண்மையில் கூட புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஹீரோயினாக நடித்தார் இந்த படத்தில் முழுவதும் சற்று கிளாமராக நடித்தால் தற்போது வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதுபோலவேதான் தமிழிலும் இவருக்கு பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் பீஸ்ட் படகுழு முதலில் இவரை நடிக்க வைக்க முயற்சி செய்தது.
கால்ஷீட் பிரச்சனை காரணமாக ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதை இதையடுத்து பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்ததாக கூறப்படுகிறது. இதேபோல் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் தேங்காய் மோகனுக்கு பதிலாக முதலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு தான் கிடைத்தது.
அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்து உள்ளார். தெலுங்கில் நானி நடிப்பில் உருவான ஷியாம் சிங்கா ராய்படத்தையும் தவறு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.