80 கால கட்டங்களிலிருந்து இப்போது வரையிலும் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருவர் மணிரத்னம் இவர் பெரும்பாலும் நாவல் கதைகளை மையமாக வைத்து படங்களை இயக்குவது வழக்கம் அந்த வகையில் இப்போது பொன்னியின் செல்வன் என்ற நாவலை மையப்படுத்தி இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் என்ற படத்தை எடுக்க உள்ளார்.
முதல் பாகம் தற்பொழுது எடுத்து முடித்துள்ளார் ஒருவழியாக படம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிரடியாக சொல்லி உள்ளது மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் அந்த கதாபாத்திரம் கதாபாத்திரத்துடன் இருக்கும் போஸ்டரை வெளியிட்டு அசத்தி உள்ளது இதனால் படத்தை பார்க்க ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஒரு நடிகை மிஸ் செய்துள்ளார் அந்த பிரபலம் வேறுயாருமல்ல தென்னிந்திய சினிமா உலகில் பல்வேறு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தான் இவர் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றதால்..
பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியேறினார் என்ற தகவல் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் இப்படி ஒரு வரலாற்று திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகை கீர்த்தி சுரேஷ் மிஸ் செய்த்து அவரது கேரியரில் மிகப்பெரிய ஒரு அடியாக பார்க்கப்படும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.