நடிகர் வடிவேலுடன் ஒரே ஒரு காட்சிதான்..! ஒட்டு மொத்த பட வாய்ப்பையும் இழந்த பிரபல நடிகை..!

vadivelu-2
vadivelu-2

தமிழ் சினிமாவில் சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி என்ற திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்தது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு என்றும் மறக்காத காட்சியாக அமைந்துவிட்டது.

அப்பொழுது வடிவேலுக்கு பெண் பார்க்கும் காட்சி ஒன்று இந்த திரைப்படத்தில் அமைந்திருக்கும் அப்பொழுது பெண்ணின் அப்பா வாம்மா மின்னல் என்ற உடன் அந்த பெண் திடீரென இங்கிட்டும் அங்கிட்டும் ஓடுவார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் இந்த காமெடி காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அமைந்தது மட்டுமின்றி  இதன் பிறகு அந்த நடிகையை அனைவரும் மின்னல் தீபா என்று அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடித்த தீபா மாயி திரைப்படத்திற்கு பிறகாக தளபதியின் தமிழன் மற்றும் மாதவனின் ரன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் திரைப்படங்களில் சரியான வாய்ப்பு கிடைக்காது தான் காரணமாக சின்னத்திரையிலும் கால்தடம் பதிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது ரசிகர் மத்தியில் மிகவும் பிடித்த சீரியலாக ஒளிபரப்பாகி வரும் சன் டிவி சீரியல் ஆன சுந்தரி சீரியலிலும் இவர் நடித்து வருகிறார். மேலும் இவர் நடித்த மாயி திரைப்படம் மாபெரும் வெற்றி பெறுவது மட்டுமின்றி மின்னல் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு வரும் என எதிர்பார்த்து இருந்தார்கள்.

minnal deepa-1
minnal deepa-1

அப்படி சொல்லி தான் வடிவேலுவும் தன்னை அழைத்து வந்ததாக தீபா கூறியிருந்தார் ஆனால் இந்த திரைப்படத்தில் மாறுகண் உள்ள பெண் போல இவர் நடித்ததன் காரணமாக இவருடைய கதாபாத்திரம் ரீச் ஆகவில்லை அதுமட்டுமில்லாமல்  அதில் நடித்தது ஒரு ஊனமுற்ற பெண் என அனைவரும் நம்பி விட்டார்கள் இதனால் எனக்கு பெயர் புகழ் எதுவுமே கிடைக்கவில்லை என தீபா கூறியுள்ளார்.

இந்நிலையில் தீபா 20 வருடங்களுக்கு பிறகாக தற்போது சசிகுமார் நடிப்பில் வெளியான ராஜவம்சம் என்ற திரைப்படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.