90 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல நாவல் மற்றும் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார் இயக்குனர் மணிரத்தினம் குறிப்பாக காதல் கதைகளை தேர்ந்தெடுத்து இயக்குவதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என கூறப்படுகிறது இவர் இதுவரை ரஜினி கமல் போன்ற டாப் ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கி அசத்தியுள்ளவர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்தினம் பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தியே ஒரு புதிய கதையை உருவாக்கியுள்ளார் அந்த படத்திற்கு பொன்னியின் செல்வன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளார் முதல் பாகத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்துள்ளார்.
படம் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், பிரபு, நாசர், விக்ரம் பிரபு, ரகுமான், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், சரத்குமார், ஜெயராம் லஷ்மி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தி உள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஒரு நடிகை இழந்துவிட்டு புலம்பிய சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது அது குறித்து பார்ப்போம். மணிரத்தினம் இயக்கத்தில் அரவிந்த்சாமி மதுபாலா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ரோஜா இந்த படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க வைக்க ஐஸ்வர்யாவை தேர்வு செய்துள்ளார்.
ஆனால் அப்போது அவர் தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றதால் ரோஜா படத்தில் நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என மறுத்து உள்ளார் ஆனால் அந்த தெலுங்கு படம் பாதியிலேயே நின்றதாம். ரோஜா திரைப்படத்தில் ஐஸ்வர்யாவுக்கு பதிலாக மதுபாலா நடித்து படம் வெளியானது. படம் எதிர்பார்த்த அளவிற்கு மிக சூப்பராக இருந்ததால் படம் அப்பொழுது வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது இந்த படத்தை ஐஸ்வர்யா பார்த்துவிட்டு இப்படி ஒரு படத்தை விட்டுவிட்டோமே என புலம்பினாராம்.