சினிமாவை பொறுத்த வரை அட்ஜஸ்ட்மென்ட் என்பது தற்போது சாதாரணமாக ஆகிவிட்டது. அப்படி சில நடிகைகள் ஊடகங்களின் பேட்டி அளிக்கும் பொது அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் தான் பட வாய்ப்பு என்று கூறி வருகின்றனர். ஆனால் ஒரு சில நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய பருத்ததால் பட வாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர்.அப்படி இருந்தும் சினிமாவில் தனது தனித்துவமான திறமையால் ஜோளிக்கின்றனர்.
இந்த நிலையில் பிரபல நடிகை ஒருவர் ஒரு ஊடகங்களில் பேட்டி ஒன்றில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மறுத்ததால் 300 பட வாய்ப்பு இழந்து உள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது தற்போது சின்னத்திரையில் கலக்கி கொண்டு வரும் நடிகை ஜீவிதா அவர்கள் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்கு அக்காவாக நடித்துள்ளார்.
இவர் தற்போது பல சீரியகளிலும் நடித்துள்ளார் அதேபோல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை ஜீவிதா அவர்கள் அளித்த ஒரு பேட்டி தற்போது இணையத்தில் வெளியாகிய செம்ம வைரல் ஆகி வருகிறது. அதாவது சினிமாவை பொறுத்தவரை இயக்குனராக இருந்தாலும் நடிகராக இருந்தாலும் மேனேஜராக இருந்தாலும் அவர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் அடுத்த அடுத்த கட்டத்திற்கு நகர முடியும் என்று கூறியுள்ளார்.
அப்படியே அவர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்யவில்லை என்றால் பட வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் என்று கூறியுள்ளார் அது மட்டுமல்லாமல் நான் படுக்கைக்கு மறுத்ததால் எனக்கு வந்த 300 பட வாய்ப்பு இழந்து தற்போது நான் சின்னத்திரையில் நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஜீவிதாவை பார்த்து புளுகலாம் ஆனால் ஓவரா புளுக கூடாது என்று ஜீவிதாவை வறுத்தெடுக்கின்றனர். ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வேண்டுமானால் இல்லாமல் இருந்திருக்கலாம் ஆனால் 300 படங்களில் நடிக்க வேண்டிய வாய்ப்பு நிறுத்தப்பட்டது என்றால் இது ஓவராக புலுகிறார்கள் என்று கூறி வருகிறார்கள்.