ஐபிஎல் என்ற ஒரு விளையாட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது கிரிக்கெட் அணியின் தலைவராக லலித் மோடி இருந்தார் ஐபிஎல் மூலம் பல கோடி பணத்தை சுருட்டினார். இதை எப்படியோ சிபிஐ விசாரித்து அவர் மீது கேஸ் போட்டது ஒரு கட்டத்தில் லலித் மோடி இந்தியாவில் இருந்தால் தனக்கு பாதுகாப்பு இல்லை என கருதி வெளிநாடு பக்கம் தப்பி ஓடினார்.
தற்பொழுது லலித் மோடி லண்டனில் வசித்து வருவதாக கூறப்படுகிறது அதேசமயம் அங்கு நிரந்தரமாக இல்லாமல் இடத்தை மாற்றியும் வருகிறாராம். இப்படி இருக்கின்ற நிலையில் தற்போது லலித் மோடி பிரபலமாக பேசப்பட காரணம் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் லலித் மோடி நெருக்கமாக இருக்கிறார்.
மேலும் இருவரும் இணைந்து டேட்டிங் செய்து வருவதால் பெரிய அளவில் இந்த செய்தி பற்றி எரிகிறது. முதலில் நடிகை சுஷ்மிதா சென் மாடல் அழகனான ரோஹ்மான் என்பவருடன் காதலில் இருந்தார். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்துள்ளனர். சுஷ்மிதா சென் இரண்டு பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் இவர் சூதாட்டா புகாரில் சிக்கிய லலித் மோடி உடன் தற்பொழுது டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது சமீபத்திய பதிவு ஒன்றில் லலித் மோடி சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு சிலவற்றை கூறியும் உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது. மாலத்தீவு சார் தான்யா ஆகிய உலக சுற்றுலாவை முடித்துவிட்டு இப்பொழுதுதான் லண்டன் வந்தோம்.
இருவரும் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளோம். டேட்டிங் செய்கிறோம் கல்யாணம் இல்லை ஆனால் அது நடக்கும் என குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.