தமிழ் சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பயணிக்கும் ரஜினி தொடர்ந்து இப்பொழுதும் மாஸ் கலந்த படங்களில் நடித்து வருகிறார். இவர் வருடத்திற்கு ஒரு படம் வெளியிடுவதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் ரஜினி கடைசியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தனது 169 வது திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் ரஜினி இறங்கி உள்ளார் என கூறப்படுகிறது. ரஜினியின் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் அவரது கேரியரில் மிக முக்கியமான அதிக வசூல் செய்த திரைப்படமானது எந்திரன் தான். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பாக ரஜினியின் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்யை நடிக்க வைக்க பல தடவை முயற்சிகள் நடந்துள்ளன ஆனால் அப்பொழுது எல்லாம் நடக்கவில்லை. சொல்லப்போனால் ரஜினியுடன் நான்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார் ஐஸ்வர்யா ராய் என்பது குறிப்பிடத்தக்கது. அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.
முதலில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஐஸ்வர்யா ராய்யை தான் தேர்வு செய்தது. அதை அவர் மிஸ் செய்ய தொடர்ந்து ரஜினியின் பாபா, சந்திரமுகி, சிவாஜி ஆகிய படங்களிலும் இதே மாதிரி NO சொல்லி உள்ளார்.
பின் கடைசியாகத்தான் இயக்குனர் ஷங்கர் பிரமாண்ட பொருட்செலவில் எடுத்த எந்திரன் படத்தின் கதையை சொன்னவுடனேயே நடிகை ஐஸ்வர்யாராய்க்கு பிடித்துப் போகவே ரஜினியுடன் கடைசியாக இணைந்ததாக கூறப்படுகிறது. ரஜினியின் 169 திரைப்படத்திலும் ஐஸ்வர்யாராய்யை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் கூறப்படுகிறது.