விபத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு என்ற திரைப்படமானது மாபெரும் வெற்றி பெற்றது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் சிம்பு நடிக்கும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது மட்டுமில்லாமல் சமீபத்தில் சிம்பு அவர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இந்தத் திரைப்படமானது ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி திரையில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கும் பத்து தல என்ற திரைப்படத்தில் சிம்பு நடித்து கொண்டிருக்கிறார். ஆனால் சமீபத்தில் சிம்புவின் தந்தையாருக்கு உடல்நல குறைவின் காரணமாக இந்த படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிகிச்சை முடிந்தவுடன் அமெரிக்காவில் இருந்து வீடு திரும்பிய நடிகர் சிம்பு அவர்கள் வருகின்ற ஜூலை மாதம் 15ஆம் தேதி மீதமுள்ள படப்பிடிப்பில் கவனம் செலுத்த உள்ளாராம் இதனிடையே சிம்புவை 19 வருடமாக ஒரு பிரபலம் காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார்கள்.
அவர் வேறு யாரும் கிடையாது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா தான் என தெரியவந்துள்ளது. அந்த வகையில் நமது நடிகைக்கு சிம்பு மீது பள்ளி பருவத்திலிருந்தே காதல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.அந்த வகையில் கிட்டத்தட்ட 16 வருடமாக ஒருதலையாக காதலித்து வருகிறேன் என்றும் அவர் கூரியுள்ளார்.
இவ்வாறு வெளிவந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக நமது நடிகர் சிம்பு முதலில் சினிமா நடிகைகளுடன் மட்டுமே கிசுகிசுக்கப்பட்டு வந்தார் ஆனால் சமீபத்தில் சீரியல் நடிகைகள் இவரை சும்மா விட்டபாடில்லை.