மாஸ் ஹீரோவின் படம் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அவர்களை ஏமாற்றாமல் படத்தின் அறிவிப்பும் வெளிவந்தது.
ஆனால் ஹீரோயின் யார் என தெரியாமல் சஸ்பென்ஸ் ஆக இருந்தது. அதற்கு முன்பே நான்கு எழுத்து நடிகை தான் இதில் நடிப்பார் என பேசப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் அந்த நடிகையும் மாஸ் ஹீரோவிடம் தனிப்பட்ட முறையில் பேசி ஓகே வாங்கி இருந்தாராம்.
ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. தற்போது அந்த உயரமான நடிகை வாய்ப்பை தட்டி பிடித்திருக்கிறார். அவர்தான் நடிக்கப் போகிறார் என அதிகாரப்பூர்வமான தகவலும் வந்துவிட்டது.
இதனால் நொந்து போன நான்கு எழுத்து நடிகை தற்போது உயர்ந்த ஹீரோயின் மீது செம கடுப்பில் இருக்கிறாராம். ஏற்கனவே அக்கட தேசத்தில் இவர்கள் இருவருக்கும் கடுமையான போட்டி நிலவியது.
அதைத்தொடர்ந்து இப்போது மாஸ் ஹீரோவால் இருவரும் மீண்டும் ஒரு பனிப்போரை தொடங்கி இருக்கின்றனர். இந்த வாய்ப்பு போனால் என்ன இனிமேல் தீவிரமாக களத்தில் குதிக்க வேண்டியது தான் என நான்கெழுத்து நடிகை முடிவு செய்துவிட்டாராம்.
அதுமட்டுமின்றி இதுவரை தான் நடித்த ஹீரோக்களுக்கு எல்லாம் போன் போட்டு சத்தம் இல்லாமல் வாய்ப்பும் கடு வருகிறார். விரைவில் அம்மணியின் அடுத்த பட வாய்ப்பு வெளிவரலாம் என திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.