தவமாய் தவம் கிடக்கும் பிரபல நடிகை.! அதுவும் ஷங்கர் இயக்குனருக்காக.

sangar 1

இந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் சங்கர். இவர் பொதுவாக தரமான நல்ல கதை உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து இயக்கி வருகிறார். இந்நிலையில் பிரபல 25 வயது நடிகை ஒருவர் ஷங்கர் இயக்கத்தில் எப்படியாவது ஒரு திரைப்படத்தில் நடித்து விட வேண்டும் என்பதற்காக கிடைக்கும் வாய்ப்புகளையும் வேண்டாம் என்று கூறி வருகிறாராம்.

இந்நிலையில் ஷங்கர் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தின் பல பிரச்சனைகளால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தையும், தெலுங்கில் ஒரு படத்தையும் இயக்க உள்ளாராம்.

இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பும் விரைவில் துவங்க உள்ளது என்றும் ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களை இயக்கவுள்ளார் தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் தற்போது இவர் சங்கர் ராம் சரணை வைத்து முதலில் திரைப்படம் இயக்க உள்ளாராம்.

எனவே அத்திரைபடத்திற்காக நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுக்கும் வேலை நடைபெற்று வருகிறதாம். நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா மற்ற திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை எல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டு ஷங்கரின் திரைப்படத்திற்காக காத்திருக்கிறாராம்.

rashmika manthana
rashmika manthana

ஏனென்றால் பொதுவாக ஷங்கர் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை இயக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்தவகையில் சங்கர் திரைப்படத்தின் நடித்தால் எப்படியாக பெரிய அளவில் பிரபலம் அடைந்து விடலாம் என்று ரஷ்மிகா மந்தனா நினைக்கிறார் போல. ராஷ்மிகா மந்தனா தற்போது தான் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார்.