தளபதி 66 திரைப்படத்தில் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை.?

vijay8
vijay8

சினிமாவையும் தாண்டி மக்களுக்கு ஏதாவது ஒரு உதவி என்றால் உடனே யோசிக்காமல் உதவும் நடிகர்களில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய் இவர் தொடர்ந்து ரசிகர்களுக்கு பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் அந்த வகையில் பார்த்தால் இவர் கடந்த சில வருடங்களாக நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் பார்த்தால் இவர் நிறைய தோல்வி திரைப்படங்களை ஆரம்ப காலகட்டத்தில் கொடுத்தாலும் தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் நன்றாக ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும் அந்த அளவிற்கு தனது முழு நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி வருகிறார் மேலும் இவரது நடிப்பில் தற்பொழுது தளபதி 65 திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

பூஜா ஹெக்டே ஏற்கனவே முகமூடி திரைப்படத்தில் நடித்துள்ளார் இதனைத் தொடர்ந்து தளபதியுடன் தளபதி 65 திரைப்படத்தில் நடித்து வருகிறார் சமீபகாலமாக தளபதி 66 திரைப்படத்தைப் பற்றி தான் தகவல்கள் வெளியாகிறது மேலும் தளபதி 66 திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குவதாகவும் அந்த திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளதாகவும் கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகிறது.

அதேபோல் தளபதி 66 திரைப்படத்தை பற்றி தற்பொழுதும் ஒரு தகவல் கசிந்துள்ளது அதாவது இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கலாம் அதில் ஒரு நடிகை ஏற்கனவே விஜய் உடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

keerthi suresh2
keerthi suresh2

யார் அந்த நடிகை என்று கேட்டால் வேறு யாரும் இல்லை நடிகை கீர்த்தி சுரேஷ் தான் இவர் ஏற்கனவே தளபதி விஜய் நடித்த பைரவா மற்றும் சர்க்கார் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மீண்டும் இவருடன் இணைந்தால் ரசிகர்களும் படம் ஹிட்டாகி விடும் என்று கூறி வருவது மட்டுமல்லாமல் இதனை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவருமா என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.