தனுஷின் அடுத்த திரைப்படத்தில் கதாநாயகியாக இணையும் பிரபல நடிகை!! வெளிவந்த புதிய தகவல்…

dhanush
dhanush

Famous actress to join Dhanush in next movie New information released: தனுஷ் தற்பொழுது அடுத்த்டுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவரது நடிப்பில் ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களில் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.

மேலும் ஜகமே தந்திரம் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து தனுஷ் அடுத்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்றும் பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.

தனுஷ் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் d43 பெயரிடாத படத்தில் நடிக்க உள்ளாராம் அந்த படத்திற்காக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன், தனுஷிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படம் வரும் டிசம்பர் மாதத்தில் பூஜையுடன் டெல்லியில் தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் தனுஷ் ரசிகர்கள் பலரும் இந்த தகவலை பகிர்ந்து வருகிறார்கள்.