மீண்டும் அஜித் உடன் இணையும் பிரபல நடிகை.! மாசாக வெளியானது ‘ஏகே 62’ அப்டேட்..

ajith 1
ajith 1

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான நடிகர் அஜித் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அறிவியல் சார்ந்த பல துறைகளிலும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் இவருடைய திறமை ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டி வருகிறார்கள். மேலும் ஒருபுறம் பைக் ரைட் மற்றொருபுறம் திரைப்படம் என தொடர்ந்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் அஜித் ஹச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பி,ல் ஜிப்ரான் இசையமைப்பில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தற்பொழுது இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும், போஸ்ட் ப்ரோமோஷன் பணிகளும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக அஜித் ஏகே 62 படத்தில் இணைய இருக்கிறார் இந்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும், லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவனின் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ள நிலையில் தற்பொழுது இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷாவை நடிக்க வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது இதற்கு முன்பு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரிஷா மிகப்பெரிய அளவில் பாராட்டினை பெற்றார்.

trisha 2
trisha 2

மேலும் பலரும் இவரை வியந்து பார்த்து வருகிறார்கள் வயதானாலும் கூட இளமையாக இருந்து வரும் இவர் தன்னுடைய அழகினால் ரசிகர்களை கட்டி ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது திரிஷா மற்றும் அஜித் இருவரும் இணையும் தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்பு அஜித்துடன் இணைந்து நடிகை திரிஷா ஜி, கிரீடம், மங்காத்தா மற்றும் என்னை அறிந்தால் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது. இவ்வாறு ஐந்தாவது முறையாக இவர்களுடைய கூட்டணியில் சில வருடங்கள் கழித்து இந்த படம் உருவாக இருக்கிறது விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.