நடிப்பிற்கு பெயர்ப்போன உலகநாயகன் கமலஹாசன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து நடித்துள்ள திரைப்படம் தான் விக்ரம் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது இந்த படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் மிகப்பிரமாண்டமாக இசை அமைத்துள்ளார் விக்ரம் படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் பேக்டரி தயாரிக்கிறது. விக்ரம் திரைப்படம் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது.
அதற்கு முன்பாக மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுக்க படக்குழு தொடர்ந்து விக்ரம் படம் குறித்தும், கமல் குறித்தும் சில சிறப்பான தகவல்களை வெளியிட்டு வருகிறது. படக்குழு அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை கோலாகலமாக நடத்தியது.
இதிலும் பல நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து அசத்தினர் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்ததையடுத்து அன்று இரவு கமல் அனைத்து சினிமா பிரபலங்களுக்கு இரவு விருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சொன்னது இரவு பார்ட்டியில் நடிகை ஆண்ட்ரியா பங்கேற்ற தாகவும் கவர்ச்சியான உடையில் கமலை அவர் சுற்றிச்சுற்றி வந்ததாகவும் சில தகவல்களை தற்போது தெரிவித்துள்ளார். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் இத்தகவல் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.