ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தபு பல்வேறு மொழிகளில் இவர் நடித்திருந்தாலும் அவர் பெரிதும் விரும்புவது என்னவோ ஹிந்தி சினிமாவை த்தான் அதனால் தற்போது அவர் அங்கேயே பெரிதும் செட்டிலாகிவிட்டார். இவர் பல மொழிகளில் பல டாப் நடிகர்களுடன் கைகோர்த்து ஹிட் படங்களை கொடுத்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்து அசத்தியவர் தபபு.
அதிலும் குறிப்பாக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதில் இடம் பிடித்தார் அவர் தமிழிலே இருந்திருந்தால் இன்று அவர் உச்ச நட்சத்திரமாக இருந்து இருப்பார் ஆனால் அதை செய்யாமல் இவர் ஹிந்தி பக்கமே இருக்கிறார்.
தற்போது பெரிய அளவு இல்ல அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தலை காட்டி நடித்து வருகிறார் இப்படி சினிமா உலகில் ஓடிக் கொண்டு இருக்கும் தபு. 51 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
சினிமா உலகில் உள்ள நட்சத்திர நடிகைகளே ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுகின்றனர் ஆனால் இதுவரை நடிகை தபு திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன் என்பது குறித்து அவர் பேசி உள்ளார்.
நான் நடிக்கும்போது இருந்து அஜய் தேவ்கன் என்னை பின் தொடர்ந்து வருகிறார் நான் என்ன செய்தாலும் அது அவருக்கு தெரிந்துவிடுகிறது நான் யாருடன் பேசினாலும் என்னை வந்து கண்டிக்கிறார் பேசக்கூடாது என்று சொல்லுகிறார் நான் எது செய்தாலும் அவருக்கு பிடிக்கவே பிடிக்காது. அதனால் நான் இதுவரையிலும் யாரிடமும் பேசாமலும், பழகாமல் இருந்து வருகிறேன் அதனால் தான் கல்யாணம் பண்ண கொள்ளாமல் இருக்கிறேன் என சொன்னார் தபு.