பட தோல்வியினால் தயாரிப்பாளரிடம் சம்பளத்தை வாங்க மறுத்த தனுஷ் பட நடிகை.! புகழ்ந்த தயாரிப்பாளர்..

SAMYUKTHA

சினிமாவை பொருத்தவரை நடிகைகளைவிட நடிகர்களுக்கு தான் முக்கியத்துவம் இருந்து வருகிறது. மேலும் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் தான் நடிகைகளுடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக நடிகைகள் தங்களுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளனர்.

இதோடு மட்டுமல்லாமல் நடிகர்களை விட நடிகைகளுக்கு குறைவான சம்பளம் வழங்கப்பட்டு வரும் நிலையில் பல நடிகர்கள் தாங்கள் நடித்த படம் தோல்வியினை அடைந்ததால் அந்தப் படத்தினை இயக்கிய தயாரிப்பாளர் நஷ்டத்தை அடையக்கூடாது என்பதற்காக தங்களுடைய சம்பளத்திலிருந்து பாதியை குறைத்து கொண்டவர்களும், முழு சம்பளத்தையும் வாங்காத நடிகர்களும் இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் முதன் முறையாக பிரபல நடிகை தான் நடித்த படம் தோல்வியை அடைந்ததால் சம்பளம் வாங்க மறுத்துள்ளார் எனவே இந்த தகவலை தயாரிப்பாளர் நெகிழ்ச்சியாக கூறி இருக்கும் நிலையில் இதனை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அந்த நடிகையை பாராட்டி வருகின்றனர். மலையாளத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சம்யுக்தா.

இவர் தமிழில் களரி, ஜூலை காற்றில் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்தில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் உலக அளவில் ரூபாய் 75 கோடி வரை வசூல் செய்ததாக பட குழுவினர்கள் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.

SAMYUKTHA 1
SAMYUKTHA 1

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த சம்யுக்தாவை தயாரிப்பாளர் சாண்ராதாமஸ் புகழ்ந்துள்ளார். அவர் கூறியதாவது, நான் தயாரித்த ‘எடுகாடு பட்டாலியன்’ படத்தில் நடித்ததற்காக சம்யுக்தாவுக்கு 65 சதவீத சம்பளத்தை தான் கொடுத்தேன்.. படம் ரிலீஸ் ஆகி சொல்லும் அளவிற்கு வரவேற்பினை பெற வில்லை. பாக்கி பணத்தை கொடுக்க முயன்ற பொழுத அவர் வாங்க மறுத்துவிட்டார்.

முழு ஊதியமும் தரவில்லை என்றால் டப்பிங் பேசவும் படத்தின் பிரமோஷனுக்கும் வர மறுக்கும் நடிகைகளுக்கு மத்தியில் சம்யுக்தா ஒரு பாட புத்தகம் போன்றவர். வருடத்துக்கு 300 படங்களுக்கு மேல் தயாராகும் மலையாள சினிமாவில் 5 சதவீத படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றனர் இந்த நிலையில் சம்யுக்தா போன்றவர்கள் தயாரிப்பாளருக்கு தேவை என்பதை என் அனுபவத்தில் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.