தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நிலையில் தற்பொழுது பாலிவுட்டிலும் மூன்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் இவ்வாறு சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் இவருக்கு சமீபத்தில் மியோசிட்டிஸ் என்ற ஆட்டோ யூனியன் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
மேலும் இந்த நோயிலிருந்து விரைவில் மீண்டு வருவேன் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நேரத்தில் கூட தன்னுடைய உடலைப் பார்த்துக் கொண்டே படத்தின் டப்பிங் வேலையை மேற்கொண்டு வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இதன் காரணமாக இவருக்கு விரைவில் உடல்நிலை குணமாக வேண்டும் என்பதற்காக பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
இவ்வாறு விவாகரத்திற்கு பிறகு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் சமந்தா. இப்படிப்பட்ட நிலையில் இவருடைய நடிப்பில் உருவாகி உள்ள யசோதா திரைப்படத்தில் ஸ்டன்ட் காட்சிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஸ்டாண்ட் மாஸ்டராக யனிக பென் பணியாற்றி இருக்கிறார்.
இவர் சமீப பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா மிக துணிச்சலான பெண்ணாக இருந்து நிஜ வாழ்க்கையில் நடப்பது போன்ற சண்டைக் காட்சிகளிலும் டூப் இல்லாமல் நடித்துக் கொண்டுள்ளார். டூப் வைத்துக் கொள்ளலாம் என நாங்கள் சொன்னோம் அதற்கு அவர் அடுத்தவர்களின் உழைப்பில் வரும் காசு, புகழ் எனக்கு தேவை இல்லை என கூறிவிட்டு நிறைவாக அனைத்து சண்டைக் காட்சிகளிலும் நடித்துக் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக ஜொலித்து வரும் நடிகர்கள் ரஜினி, அஜித், கமல் போன்றவர்கள் கூட டூப் வைத்துக் கொண்டுதான் நடித்து வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு வயதான மற்றும் கால்ஷிட்டு பிரச்சினையாலும் இதுபோன்று நடப்பது வழக்கம் ஆனால் நடிகை சமந்தா பெண்ணாக இருந்து கொண்டு இவ்வாறு சட்டை காட்சிகளில் நடித்து அசத்தி மிரட்டி இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. எனவே நடிகை சமந்தாவுக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளை கூறி வருகிறார்கள்.