actress reemasen current status: கௌதம் மேனன் இயக்கத்தில் 2000ம் ஆண்டு வெளியான மின்னலே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ரீமாசென். இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு காலகட்டத்தில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் என்பதை அனைவரும் அறிந்ததே.
இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, வங்காளம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் அன்று நடித்த வசீகரா பாடல் இன்றுவரை பல இளைஞர்களின் ஃபேவரிட் ஆக உள்ளது.
மேலும் இவர் இதனை தொடர்ந்து தூள்,செல்லமே, பகவதி, வல்லவன், ராஜபாட்டை, திமிரு,ஆயிரத்தில் ஒருவன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் எப்படி உள்ளார் என்று தெரியாமல் இருந்த நிலையில் சமீபத்தில் நடிகை மாளவிகாவுடன் சேர்ந்து புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார்.
நடிகை ரீமாசென் 2012 ஆம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ருத்ர வீர் என்ற அழகிய மகனும் உள்ளார். ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த ரீமாசென்னா என்று வியக்கும் அளவிற்கு, தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் குண்டாக மாறிவிட்டார். இவரின் கணவர் வயதானவர் போல் உள்ளார் என்று ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.