விஜய்யை புகழ்ந்து பேசிவிட்டு கடைசியில் பீஸ்ட் படத்தை கழுவி ஊற்றிய பிரபல நடிகை.! ஷாக்கான ரசிகர்கள்.!

beast
beast

தமிழ் சினிமா உலகில் ஒரு சில நடிகர்களின் படங்களை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் நடிகர் விஜய்க்கு என மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது அதற்கு ஏற்றார் போல் அவரும் சூப்பரான மாஸ் கலந்த  படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

அதே போலவேதான் விஜய்யின் 65வது திரைப்படமான பீஸ்ட் படமும் இருக்கும் என ரசிகர்கள் மனக் கணக்கு போட்டனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லாததால் தற்போது கலவையான விமர்சனத்தை பெற்று வசூலிலும் ஓரளவு அள்ளி வருகிறது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை பலரும் விமர்சித்து கொண்டுதான் வருகின்றனர்.

ஏனென்றால் அந்த அளவிற்கு படம் சுத்தமாக லாஜிக் இல்லாமல் இருப்பதாக கூறுகின்றனர் மேலும் காமெடியும் அந்த அளவுக்கு இடம் பெறவில்லையாம். இப்படி இருக்கின்ற நிலையில் விஜய்யின் தீவிர ரசிகையான பிரபல நடிகை கஸ்தூரி இந்த படம் குறித்து சில கருத்துகளை கூறி உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது.

விஜய்யின் தீவிர ரசிகை நான் அந்த காரணத்தினால் பீஸ்ட் படத்தை நான் நான்கு முறை பார்த்து ரசிப்பேன் ஆனால் மக்கள் ஒரு முறையாவது பார்க்கும்படி படத்தை எடுத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

இதை அறிந்த விஜய் ரசிகர்கள் தற்போது நடிகை கஸ்தூரி கமெண்ட்களின் மூலம் வறுத்தெடுத்து வருகின்றனர். நடிகை கஸ்தூரி சினிமா உலகில் எந்த அநீதி நடந்தாலும் அதற்கு குரல் கொடுக்கக் கூடியவர் தற்போது படம் சரியில்லை என்றாலும் அதற்கும் கமெண்டுகளை தெரிவித்தது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.