சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்து ஒரு கட்டத்திற்கு பிறகு தனக்கென ஒரு அந்தஸ்து வந்ததால் நடிகை நயன்தாரா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் மேலும் இதன் காரணமாக தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவில் நயன்தாரா பிடித்திருக்கும் இந்த இடத்தை அடுத்ததாக யார் பிடிப்பார் என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் இந்த இடத்தினை பிடிக்க வேண்டும் என்பதற்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டம் தீட்டி வருகிறாராம்.
அதோடு மட்டுமல்லாமல் இவர் தற்பொழுது எல்லாம் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் நடிக்காமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ந்து ஏராளமான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
இப்படிப்பட்ட நிலையில் பொதுவாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகளுக்கு திருமணத்திற்குப் பிறகு அவர்களுடைய மார்க்கெட் இழந்து விடுவார்கள். எனவே தற்பொழுது திருமணத்திற்கு பிறகு நயன்தாரா முன்பு போல் பெரிதாக படங்களில் நடிக்க மாட்டார் என்றும் விரைவில் இவருக்கு குழந்தை பெற்றுவிட்டால் இவருக்கென இருக்கும் அந்தஸ்து குறைந்து விடும் எனவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இதன் காரணமாக இதற்கு மேல் முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடிப்பதை விட்டுவிட்டு முழுக்க முழுக்க கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் சிறந்த பெண் கதாபாத்திரத்தில் மட்டும்தான் நடிப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டம் போட்டுள்ளாராம். இதன் காரணமாக ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து மறைமுகமாக விமர்சித்து வருகிறார்கள்.
தற்பொழுது நடிகை நயன்தாரா அட்லீ இயக்கத்தில் பாலிவுட்டில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அஜித்தின் அடுத்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன் வேறு ஒரு நடிகையை புக் செய்து விட்டார்.