இந்தியன் 2 படத்திற்காக ஓடிவந்த பிரபல நடிகை – விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

indian-2

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் எப்பொழுதுமே பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்களை இயக்கி வெற்றியை ருசிப்பது அவரது ஸ்டைல் அந்த வகையில் நடிகர் கமலுடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து இந்தியன் 2 படத்தில் இணைந்தனர் ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே கைவிடப்பட்டது.

அதன் பிறகு கமல் அரசியல் சினிமா என மறுபக்கம் ஓட இயக்குனர் ஷங்கரும் தெலுங்கில் ராம்சரனை வைத்து ஒரு படத்தை எடுக்க திட்டம் தீட்டினார். இதனால் இந்த படம் அவ்வளவுதான் என பலரும் சொல்லினர் ஆனால் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் விடாமல் தொடர்ந்து கேஸ் போட்டு இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டியது.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங், குரு சோமசுந்தரம், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரகனி, ஐஸ்வர்யா ராஜேஷ், டெல்லி கணேஷ், யோகி பாபு மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர் கமல் வெகு விரைவிலேயே இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் தற்பொழுது அவர் அமெரிக்காவில் இருக்கிறார் என சொல்லப்படுகிறது. படத்தின் மீதி படப்பிடிப்பை வெறும் 120 நாட்களிலேயே முடிக்க இயக்குனர் சங்கர்  திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக ரகுல் ப்ரீத் சிங் தற்போது சென்னை வந்துள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும்  கமெண்டுகளையும் அள்ளி வீசி அசைத்தி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

rakul preeth singh
rakul preeth singh