உயரமான நடிகை ஒருவர் பட வாய்ப்பு இல்லாததால் அட்ஜஸ்ட் செய்ய முடிவெடுத்தது தயாரிப்பாளர்களுக்கு பிடித்துள்ளது. இவர் ஏன் இந்த முடிவை எடுத்துள்ளார் தெரியுமா.
நல்ல வளர்த்தி ஆன நடிகை இவர் உயரம் மட்டும் அல்லாமல் நடிப்பிலும் வேற லெவல் தான், இயக்குனர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவார், தமிழை காட்டிலும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் தமிழில் ஒரு படத்திற்காக உடல் எடையை ஏற்றினார். ஆனால் அதைக் குறைப்பதற்கு படாதபாடு பட்டு விட்டார்.
வளர்ந்த நடிகை குண்டானதை பார்த்து தமிழ் ரசிகர்கள் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் ஆன்ட்டி என கிண்டல் செய்தார்கள். அவ்வளவுதான் அவருக்கு கோபம் மூக்கின்மேல் வந்துவிட்டது அதனால் கோலிவுட் பக்கம் வருவதையே தவிர்த்து விட்டார். ஒருவழியாக உடல் எடையை குறைத்த வளர்ந்த நடிகை, எவ்வளவு வேகத்தில் குறைந்ததோ மீண்டும் அதே வேகத்தில் எடை கூடிக்கொண்டே போகிறது.
வளர்ந்த நடிகையின் நண்பர் முன்னணி ஹீரோ தன்னுடன் இருக்கும் பிரபலங்களிடம் குண்டாக இருந்தால்தான் அழகு என கூறியுள்ளார், இவர் குண்டானதால் இவரின் மார்க்கெட் கிடுகிடுவென அடி வாங்கியது, அதனால் விட்ட இடத்தை பிடிக்க வளர்ந்த நடிகை முடிவெடுத்துவிட்டார். அதனால் முதல் கட்டமாக தனது சம்பளத்தை குறைக்க தொடங்கியுள்ளார், இவர் இப்படி சம்பளத்தை குறைப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
இருந்தாலும் இவர் சம்பளத்தை குறைப்பது தயாரிப்பாளர்களுக்கு ஒரே குஷிதான். இப்படி ஒரே அடியாக சம்பளத்தை குறைத்தது எந்த அளவு இவருக்கு கைகொடுக்கும் என்பது இதுவரை தெரியவில்லை, இவர் சம்பளத்தை குறைக்கும் நேரத்தில் இவர்கள் வீட்டில் மாப்பிள்ளை தேடி வருகிறார்களாம். வளர்ந்த நடிகையின் பெற்றோர்கள் வயது எகிறிக் கொண்டே போவதால் விரைவில் திருமணத்தை முடித்து விடலாம் என முடிவெடுத்துள்ளாராம்.