அச்சு அசல் குஷ்பு போலவே இருக்கும் அவரது மகளை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்

kushboo
kushboo

நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி எட்டு ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் என்ற திரைப்படத்தில் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து வருஷம்16, வெற்றிவிழா, கிழக்கு வாசல், நானும் இந்த ஊருதான், தாலாட்டுபாடவா மை டியர் மார்த்தாண்டா, பாட்டுக்கு நான் அடிமை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் நடிகை குஷ்பு ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன. நடிகையாக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் பணியாற்றி வருகிறார் பாரதி ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.

தமிழ் சினிமா உலகில் 1980 களில் குழந்தை நட்சத்திரமாக தான் தனது திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தார்.அதேபோல் ஆயிரத்து தொள்ளாயிரத்து 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர். அதுமட்டுமில்லாமல் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் என பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தவர்.

தற்பொழுது இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். இவர் இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர் சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் குஷ்புவின் இரண்டாவது மகள் தற்போது தனது உடல் எடை முழுவதுமாக குறைத்து தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவரின் பெயர் ஆனந்திதா இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அச்சு அசல் குஷ்புவை உரித்து வைத்துள்ளார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதொ அவர் வெளியிட்ட புகைப்படம்.

kushboo daughter
kushboo daughter