கோவிலில் அத்துமீறிய போட்டோ ஷூட்டில் பிரபல நடிகை..! கையும் களவுமாக காவல்துறை அதிகாரியிடம் பிடிபட்ட சம்பவம்..!

nimisha-1

தற்போது சினிமா பிரபலங்கள் பலரும் போட்டோ ஷூட் என்ற பெயரில் விதவிதமான இடத்தில் பல வகையான இடங்களுக்குச் சென்ற போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்கள் அந்த வகையில் இவர் எடுக்கும் போட்டோக்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதே போல பல்வேறு போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளப் பக்கத்தில் பிரபலமாக இருந்து வரும் மலையாள நடிகை தான் நிமிஷா பிஜோ.இவர் சமீபத்தில் கேரளாவிலுள்ள ஆரன்முளா கோவிலுக்கு சென்றுள்ளார் அப்பொழுது பாம்பு படகில் செருப்பு அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அந்த வகையில் இவர் போட்டோ ஷூட் நடத்தும் போது மிக டைட்டான ஜீன்ஸ் டி-ஷர்ட் அணிந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல் தனது காலணிகளுடன் கோவிலில் இப்படி ஒரு போட்டோ ஷூட் நடத்தியது பெரும் சர்ச்சையை சமூக வலைதளப் பக்கத்தில் உருவாக்கிவிட்டது.

பொதுவாக இந்த கோவிலுக்கு சொந்தமான இந்த படகில் பெண்களுக்கு அனுமதி கிடையாது அதை மீறி இவர் போட்டோ ஷூட் எடுத்ததன் காரணமாக தேவஸ்தானம் அளித்த புகாரின் பெயரில் இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் இவருடைய நண்பரும் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து நான் போட்டோ ஷூட் எடுத்தது என்னுடைய தவறுதான் அங்கு இருப்பவர் யாரும் என்னை தடுக்காமல் நான் போட்டோ ஷூட் எடுப்பது வேடிக்கைதான் பார்த்தார்கள் இதனால்தான் நான் தெரியாமல் இந்த தவறை செய்துவிட்டேன்.

இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என காவல்துறை அதிகாரிகள் மத்தியில் மன்னிப்பு கேட்டதன் காரணமாக இவர் மற்றும் அவருடைய நண்பர் உன்னி ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டார்கள்.  இவர் வெளியிட்ட புகைப்படத்தின் மூலமாக ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.