கொரோனாவின் கோரத் தாண்டவம்!! உணவு கிடைக்காத குழந்தைகளுக்கு நிதியாக பல கோடிகளை அள்ளி தந்த பிரபல நடிகை.!

corona
corona

சீனாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமடைந்தது, இதனையடுத்து தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பரவி மெல்ல மெல்ல இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் மிக வேகமாக பரவி உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

உலகத்தில் இதுவரை 5 லட்சம் பேருக்கு மேல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதேபோல் இந்த கொரோனா வைரஸால் இதுவரை கிட்டத்தட்ட 23 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது, அதனால் இந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்கு உலக நாடுகள் முழுவதும் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் ஊரடங்கு உத்தரவை பல நாடுகளில் கடைபிடித்து வருகிறார்கள்.

இந்த ஊரடங்கு உத்தரவால் தின கூலி வேலை செய்து பிழைத்து வரும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை குழந்தைகள் அனைவரும் உணவு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர், ஹாலிவுட்டில் பிரபல நடிகையான ஏஞ்சலினா ஜூலி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பசியால் வாடும் குழந்தைகளுக்கு 7.5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

இவர் நோ ஹிட் ஹங்கிரி என்ற அமைப்புகளிடம் நிவாரண நீதியை வழங்கியுள்ளார், இந்த பணம் அனைத்தும் பசியால் வாடும் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.