சமிபத்தில் பிரபல பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தை பெற்றுக் கொண்ட சம்பவம் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வந்தது மட்டுமில்லாமல் ரசிகர்கள் பலரும் இதற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை பழம்பெரும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தில் சே என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றார். அந்த வகையில் இவர் அறிமுகமான முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக இவர் எளிதில் பிரபலமாகிவிட்டார்.
ஏனெனில் தொடர்ந்து இதே திரைப்படம் தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியானது அந்த வகையில் தமிழிலும் பெயர்போன நடிகையாக மாறிய நமது நடிகை பாலிவுட்டில் மிகப்பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் நடித்த நமது நடிகை கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக அமைந்துள்ளது.
மேலும் இவர் கிரிக்கெட் விளையாட்டில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் இவரும் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஜீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் நமது நடிகைக்கு சுமார் 46 வயதாகும் நிலையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளார் அந்த வகையில் இந்த குழந்தைகளுக்கு விஜய் ஜிந்தா, ஜியா ஜிந்தா என பெயர் வைக்கப்பட்டுள்ளது இதனால் நமது நடிகை மிகுந்த சந்தோஷத்துடன் இருப்பது மட்டுமில்லாமல் இந்த குழந்தைகளை அன்புடன் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.
மேலும் தன்னை தாய்மை படுத்திய மருத்துவர், செவிலியர், மற்றும் வாடகைத்தாய் ஆகிய அனைவருக்கும் என்னுடைய நன்றி என நமது நடிகை கூறியது மட்டுமில்லாமல் ரசிகர்கள் பலரும் இதற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.