பொதுவாக தமிழ் சினிமாவில் தலைவா என அன்புடன் அழைக்கப்படுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தான் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் தனுஷ் அவர்களை தலைவா என அழைத்துள்ளது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
இவர் பாலிவுட்டிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அது மட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது பாலிவுட் திரைப்படமான அத்ராங்கே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் அக்ஷய் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அது மட்டுமில்லாமல் தனுஷ் சாரா அலி கான் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து உள்ளார்கள். படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தனுஷ் மற்றும் சாரா அலிகான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சாரா அலிகான் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ அவருக்கு பக்கத்தில் தலைவா என தனுஷுடன் ஜிம்மில் ஒரு பயிற்சி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ காட்சியின் பின்னணியில் ரஜினி நடிப்பில் வெளியாகிய பேட்ட என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மரண மாஸ் என்ற பாடல் ஒலிக்கிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.
Training with thalaiva @dhanushkraja ✨ pic.twitter.com/MN3XhxlOCG
— Sara Ali Khan (@iam_SaraAliKhan) November 27, 2020