தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நடிகையாக , நடிகராக வளம் வந்து கொண்டிருபவர்கள் இதோ ,
ஷால்னி ;
இவர் பேபி ஷாலினி என்கிற என்ற பெயரின் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனையடுத்து 1985 ஆம் ஆண்டு பந்தம், பிள்ளை நிலா, விடுதலை, சங்கர் குரு, ராஜா சின்ன ரோஜா போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் தமிழ் ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான 90 படங்கள் நடித்துள்ளார். அஜித் ஷாலினி இருவரும் இணைந்து தமிழில் வெளிவந்த அமர்க்களம் திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்த போது இருவரும் காதல் வயப்பட்டனர். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு ஷாலினி எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.
ஹன்சிகா மோட்வாணி;
ஹன்சிகா மோட்வானி இந்திய பிரபல நடிகை யார். இவர் 2003 ஆம் ஆண்டு இந்தியில் ஒளிபரப்பான எஸ்கேப் பிரோம் தாலிபான் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரை உலகிற்கு அறிமுகமானார்.இதனைத் தொடர்ந்து ஹவா, கோயி மில் கயா, ஆப்ரா கா தாத்ரா, ஜாகோ, ஹம் கோன் ஷோ போன்ற தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு வேலாயுதம் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கலக்கி வருகிறார்.
ஸ்ரேயா சர்மா;
இவர் தற்பொழுது தெலுங்கு திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார். 2006 ஆம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த ஜில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தின் மூலம் சூர்யா ஜோதிகாவின் மகளாக நடித்து இருப்பார். அதில் தனது சிறந்த நடிப்பை வெளியிட்டார்.
ஷாமிலி;
இவர் ஷாலினியின் தங்கை ஆவார். இவர் தன்னுடைய இரண்டு வயதில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். 1990ஆம் ஆண்டில் திரை உலகிற்கு வெளிவந்த அஞ்சலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் .அதில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையாக நடித்திருப்பார். இதனால் அவர்களுடைய நடிப்பை பாராட்டி குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார். இதற்கு அடுத்ததாக தெலுங்கில் 2009ஆம் ஆண்டு வெளிவந்த ஓய் என்ற திரைப்படத்தில் முதன் முறையாக கதாநாயகியாக நடித்தார்.
நிவேதா தாமஸ்;
இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார். சின்னத்திரையிலும் நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். 2003 ஆம் ஆண்டில் திரை உலகிற்கு வெளிவந்த உத்ரா என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பிறகு விஜய் நடிப்பில் தமிழில் வெளிவந்த குருவி படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். இது மட்டுமல்லாமல் பல படங்களில் நடித்து பிரபலமடைந்த.
ஷீலா கவுர்;
இவர் 1996ஆம் ஆண்டு திரை உலகிற்கு வெளிவந்த பூவே உனக்காக என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நந்தா, இளவட்டம், வீராசாமி போன்ற இருபதிறகும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
மாஸ்டர் மகேந்திரன்;
இவர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். 1994 ஆம் ஆண்டு நாட்டாமை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவருக்கு இருமுறை தொடர்ந்து சிறந்த குழந்தை நட்சத்திரமான தேசிய விருதை பெற்றுள்ளார். இதனைத் தொரர்ந்து தாய்க்குலமே தாய்க்குலமே, மகாபிரபு, வாய்மையே வெல்லும், கும்பகோணம் கோபாலு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2013ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த விழா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதற்கு அடுத்ததாக அக்கி, போரிட பழகு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.மேலும் இவர் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
ஸ்ருதி ஹாசன்
இவர்குழந்தை நட்சத்திரமாக நடித்தார் அதன் பின்பு பல திரைப்படத்தில் நடிகையாக நடித்துவந்தார்.