பிரபல நடிகையால் அஜித் படத்தின் கதையில் மாற்றம் – ஆச்சரியப்படும் திரையுகலம்.? அந்த செல்லக்குட்டி யாரு..

vedhalam
vedhalam

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக தற்போது விஸ்வரூபம் எடுத்துயுள்ளவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன அதுவும் டாப் ஹீரோக்கள் படம் என்பதால் செல்லம் செம சந்தோஷத்தில் இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் தமிழில் சிவகார்த்திகேயன், விக்ரம், விஜய் போன்ற ஜாம்பவான்கள் உடன் நடித்த பிறகு தற்போது வாய்ப்புகள் அதிகமாக கிடைத்துள்ளன அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படம் தெலுங்கில்  ரீ மேக் செய்யப்பட உள்ளது.

இந்த படத்தில் அஜித் ரோலில் சிரஞ்சீவி நடிக்கிறார் அவருக்கு தங்கையாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல். கீர்த்திசுரேஷ் தெலுங்கில் நடித்த மகாநதி படம் அவருக்கு தேசிய விருது எல்லாம் வாங்கி கொடுத்தது அதனால் அவருக்கு மிகப்பெரிய  மார்க்கெட் உருவாகி உள்ளதால் சில காட்சிகள் சேர்க்கப்பட்டு அவருக்காக அங்கு எடுக்கப்பட உள்ளனர்.

ஜொலிக்கும் டாப் ஹீரோகள் நடிக்கும் போது படத்தின் கதையில் சில மாற்றங்களை கொண்டு வருவது வழக்கம் ஆனால் ஒரு ஹீரோயின் காக்க இவ்வாறு செய்வது இதுவே முதல் முறை என்கின்றனர் ரசிகர்கள்.

எது எப்படியோ கீர்த்தி சுரேஷ் இதில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார் எனவும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.