கமலின் பிறந்தநாள் பார்ட்டியில் பிரபல நடிகை.? அவரே வெளியிட்ட புகைப்படம்.!

kamal
kamal

உலகநாயகன் கமலஹாசன் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சர்வ சாதாரணமாக நடித்து அசத்தும் வல்லமை படைத்தவர். இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான். இவர் கடைசியாக நடித்த விக்ரம் திரைப்படம் கூட விமர்சன ரீதியாக நல்லா வரவேற்பு பெற்று வசூலில் அடித்து நொறுக்கியது

கமலின் விக்ரம் திரைப்படம் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் சுமார் 410 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.  அதனைத் தொடர்ந்து இன்னொரு ஹிட் படத்தை கொடுக்க உலகநாயகன் கமலஹாசன்  பிரம்மாண்ட   இயக்குனர் ஷங்கருடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக  நடித்து வருகிறார்.

அதுவும் இந்த படத்தில் வயதான கேரக்டரில் கமல் நடிக்கிறார் இவருடன் கைகோர்த்து சித்தார்த்த, பாபி சிம்ஹா, ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர் இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு கமல்..

அடுத்ததாக  பிரபல இயக்குனர் மணிரத்தினம், ஹச். வினோத், லோகேஷ் கனகராஜ் டாப் இயக்குனர்களுடன் அடுத்தடுத்து படம் பண்ண இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் உலக நாயகன் கமலஹாசன் இன்று பிறந்தநாள் காணுகிறார். அதனை முன்னிட்டு பல சினிமா பரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மக்கள் மற்றும் ரசிகர்கள் அவரது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வாழ்த்து கூறி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை பிந்து மாதவி கமலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் கமலின் பிறந்தநாள் பார்ட்டியில் நடந்தது போல தெரிகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

kamal
kamal