படத்தில் தத்ரூபமாக இருக்க நிஜமாகவே காதலித்த பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் – யாரை தெரியுமா.? அவரே பேட்டியில் சொன்னது.!

aishwarya-rajesh
aishwarya-rajesh

தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரம் ஹீரோயின் கெஸ்ட் ரோல் என எதுவாக இருந்தாலும் அந்த எல்லா வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்து தற்போது பட வாய்ப்பை அள்ளுகிறார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமா உலகில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து தனது திறமையை உணர்ந்து கொண்டதன் காரணமாக சினிமாவில் முதலில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார். அதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதற்கு பிறகு படங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்பை கைப்பற்றி தற்போது மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து வருடத்திற்கு 5 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. தற்போது கூட விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மோகன்தாஸ் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் வெகு விரைவில் வெளியாக இருப்பதால் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி ஒன்றில் சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியது வடசென்னை திரைப்படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதாவது வட சென்னை படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் மிகமிக அற்புதமானது படம் வெளிவந்து எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. நானும் தனுஷும் லவ் பண்ற போர்ஷன் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வெற்றிமாறன் என்னிடம் தனுஷ லவ் பண்ண வேண்டும் என கூறினார்.

அப்படி செய்தால் மட்டுமே.. காட்சி மிக அற்புதமாக இருக்கும் என கூறினார்.தனுஷூம் என்னை காதலித்த நடித்ததால் தான் அந்த காட்சிகள் சிறப்பாக வந்ததாக கூறினார். மேலும் பேசிய அவர் தனுஷ் ஒரு அற்புதமான மனிதர் டப்பிங் பேசும் போது கூட அவருடைய நடிப்பை விட என்னுடைய நடிப்பு சிறப்பாக இருப்பதாக கூறி என்னை பாராட்டினார். அது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என கூறினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.