தளபதி விஜய் சமீபகாலமாக இளம் இயக்குனர்களுடன் பெரிதும் படம் எடுத்து வருகிறார் அந்த வகையில் அட்லி, லோகேஷ் கனகராஜ் இவர்களை அடுத்து தற்போது கோலமாவு கோகிலா டாக்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்த இளம் இயக்குனரான நெல்சன் திலீப்குமார் உடன் இணைந்து விஜய் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதியன்று உலகளவில் வெளியாகியது. பீஸ்ட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் ஆவலாக எதிர்பார்த்திருந்த நிலையில் படம் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதும் பூர்த்தி செய்யவில்லை என்றாலும் கலவையான விமர்சனத்தை பெற்று வருகின்றன.
அதனால் நாட்கள் போகப்போக பீஸ்ட் படத்தின் வசூல் குறையும் என தெரிய வருகிறது. விஜய் இந்த படத்தை தொடர்ந்து உடனடியாக அவரது அடுத்த படத்திலும் கமிட்டாகியுள்ளார் விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி மற்றும் தில் ராஜூ தயாரிக்க உள்ளார். இந்த படப்பிடிப்பின் பூஜை கூட சமீபத்தில் தொடங்கப்பட்டு பல புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியது.
அதில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் உள்ளார்கள். மேலும் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் இணைய உள்ளதாகவும் புகைப்படங்கள் வெளிவந்தன அதையடுத்து தற்போது இந்த படத்தில் சரத்குமாரின் கதாபாத்திரம் வெளியாகியுள்ளது.
நடிகர் சரத்குமார் விஜய்யின் 66 வது படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு இரண்டு மூத்த சகோதரர்கள் இருக்கிறார்களாம் அதனால் அந்த கதாபாத்திரத்திற்கு 90 நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றன.