தமிழ் சினிமாவில் தற்போது கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களை விட வில்லனாக நடிக்கும் நடிகர்களுக்கு தான் அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பது மட்டுமில்லாமல் பெருமளவு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள் அந்த வகையில் இந்த ஆண்டு ரசிகர்களை கவர்ந்த ஐந்து வில்லன் நடிகர்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவது மட்டுமில்லாமல் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் அவருக்கு வெற்றி கொடுக்காவிட்டாலும் அவர் வில்லனாக நடித்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி கொடுத்த அவரை கௌரவித்தது.
நடிகர் எஸ் ஜே சூர்யா இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமின்றி இயக்குனராகவும் வில்லனாகவும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிக் காட்டி வருகிறார் அந்த வகையில் இவர் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருப்பார்.
நட்டி நட்ராஜ் இவர் தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் அதன்பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான கர்ணன் என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் இதன் மூலம் இவரும் பிரபலமாகிவிட்டார்.
வினை இவர் தமிழ் சினிமாவில் உன்னாலே உன்னாலே என்ற திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிகாட்டி ரசிகர்களை கவர்ந்தார் அதன்பிறகு துப்பறிவாளன் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஆரம்பித்து தற்போது டாக்டர் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்து விட்டார்
ஜான் கோக்கன் தமிழ் சினிமாவில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தின் மூலம் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் ஜான் இவர் எந்த திரைப்படத்திற்கு முன்பாக குஸ்தி வீரம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளர்.