திறமை இருந்தும் குறைந்த சம்பளம் வாங்கும் பிரபல நடிகர்கள் – லிஸ்ட் இதோ.!

tamil-actors
tamil-actors

சினிமா உலகில் திறமை இருந்தும் பெரிய அளவில் அவர்கள் பேசப்படாமல் இருக்கின்றனர் அதன் காரணமாகவே அவர்கள் சினிமா உலகில் குறைந்த சம்பளம் வாங்கி ஓடுகின்றனர். அந்த நடிகர்கள் யார் யார் என்பது குறித்து தற்பொழுது விலாவாரியாக பார்ப்போம்.

1. காமெடியனாக அறிமுகமாகி பின் ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்தவர் நடிகர் சந்தானம் இவர் படங்கள் மிகப்பெரிய வெற்றியை ருசிக்கவில்லை என்றாலும் படத்தின் பட்ஜெட்டையும் தாண்டி லாபத்தை பார்த்து விடுகின்றன அதனால் தற்போது இவருக்கு சம்பளம் கொஞ்சம் கொஞ்சமாக ஏரி உள்ளது இவர் தற்பொழுது ஒரு படத்திற்கு 9 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே அதிகபட்ச சம்பளமாக சந்தானத்திற்கு உள்ளது.

2. நடிகர் மாதவன் மின்னலே  படத்தில் நடித்து தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார் அதன் பின் ரன், தம்பி, யாவரும் நலம், டும் டும் டும் என பல்வேறு சிறந்த படங்களில் நடித்து வந்தவர் ஒரு கட்டத்திற்கு பிறகு தற்போது ஹீரோ வில்லன் என மாறி நடித்து வருகிறார் இவர் தற்பொழுது ஒரு படத்திற்கு சுமார் 5 அல்லது 6 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

3. எஸ் ஜே சூர்யா ஹீரோ வில்லனாக சினிமா உலகில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார் மாநாடு படத்திற்கு முன் இரண்டு கோடி சம்பளம் வாங்கி வந்த எஸ் ஜே சூர்யா சிம்புவின் மாநாடு படம் பிரம்மாண்ட வெற்றியை ருசிப்பதற்கு பிறகு தற்போது தனது சம்பளத்தை உயர்த்தி சுமார் 6 கோடி ஒரு படத்திற்கு வாங்கி வருகிறாராம்.

4. நடிகர் அருண் விஜய் சினிமா உலகில் தொடர்ந்த ஹீரோ வில்லனாக நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான யானை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது தற்போது ஒரு படத்திற்கு சுமார் 5 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

5. நடிகர் ஆர்யா தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சார் பட்டா பரம்பரை படம் சூப்பர் ஹிட் அடித்தது. நடிகர் ஆர்யா ஒரு திரைப்படத்திற்காக சுமார் 5 கோடி சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

6. அதிக திறமை இருந்தும் அதை சரியாக வெளிப்படுத்தாத நடிகர்களாக தற்போது இருப்பவர்கள் சசிகுமார், பாபி சிம்ஹா, ஹரிஷ் கல்யாண், ஹிப் ஹாப் ஆதி போன்றவர்கள். அண்மைக்காலமாக வெற்றி படங்களை கொடுக்காமல் இருக்கின்றனர் அதனால் அவரது சம்பளமும் குறைந்துள்ளது. ஒரு படத்திற்கு இப்பொழுது சுமார் மூன்று கோடி சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.