திரைப்படத்தில் கூட ரஜினியை அடிக்க மனம் வராது பிரபல நடிகர்கள்..! அதே படத்தில் துணிச்சலாக ரஜினியை துரத்திய பிரபல நடிகர்..!

rajini-1
rajini-1

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை மிகப்பிரபலமான நடிகராகவும் முன்னணி நடிகராகவும் திகழ்ந்து வந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் நல்ல கதையம்சம் உள்ள தான் காரணமாக மாபெரும் ஹிட்டு கொடுப்பது மட்டுமில்லாமல் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது அந்த வகையில் திரைப்படங்களில் ரஜினி காட்டும் ஸ்டைல் மற்றும் பந்தா போன்றவற்றிற்கு மயங்காத ரசிகர்களே கிடையாது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்போது வயது முதிர்ந்தாலும் சரி அவர் தான் தமிழ் சினிமாவிற்கு சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் சமீபத்தில் கூட நமது நடிகர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமாக இந்த திரைப்படம் பார்க்கப்பட்டது என்றே கூறலாம்.

இது ஒரு பக்கம் இருக்க கடந்த 2005ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட்டு கொடுத்த திரைப்படம் தான் சந்திரமுகி இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ரஜினி நடித்தது மட்டுமல்லாமல் நாயகியாக நயன்தாரா பிரபு ஜோதிகா என பலர் நடித்துள்ளார்கள்.

மேலும் சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினியை  அடித்து வீட்டை விட்டே துரத்தும் காட்சி இடம்பெற்றிருக்கும் அந்த காட்சியில் நடிகர் நாசர் தான் ரஜினி வீட்டை விட்டு வெளியேறுவார்.  அதுமட்டுமில்லாமல் முதலில் பிரபு தான் இந்த செயலை செய்ய வேண்டியிருந்தது அதன்படிதான் இந்த திரைப்படத்தின் கதையும் உருவாக்கியிருந்தார்கள்.

prabhu
prabhuprabhu

ஆனால் முதலில் இந்த காட்சிக்கு நடிகர் பிரபு சரி என்று சொல்லிவிட்டு கடைசியில் முடியாது என்று சொல்லிவிட்டாராம் பின்னர் இந்த காட்சியில் நடிகர் விஜயகுமாரை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்தார்கள் ஆனால் அவரும் முடியாது என்ற காரணத்தினால் நாசர் இந்த காட்சியில் சிறப்பாக நடித்து முடித்துக் கொடுத்துள்ளார்.

nasar
nasar