ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ராதேஷ்யாம் இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ்க்கு ஜோடியாக தெலுங்கு நட்சத்திர நடிகையான பூஜா ஹெக்டே கமிட்டாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இந்த படப்பிடிப்பு முடிய இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே எடுக்க வேண்டியது தான் பாக்கி என படக்குழு சமிபத்தில் தெரிவித்தது.
இந்த நிலையில் ராதேஷயம் படத்தில் பூஜா ஹெக்டேவின் நடிப்பை நடிப்பை பார்த்த பிரபாஸ்ஆச்சரியப்பட்டு போனாராம் அந்த அளவிற்கு அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளாராம் இந்த நடிப்பு பார்த்தவுடன் பிரபாஸும் அவரை நேரில் சந்தித்து கை கொடுத்து தனது பாராட்டை தெரிவித்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் பிரபாஸ் இந்த படத்தை தொடர்ந்து சலார், ஆதிபுருஷ் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவரைப்போலவே நடிகை ப நடிகை பூஜா ஹெக்டே பல்வேறு திரைப்படங்களில் தற்போது கமிட்டாகியுள்ளார் அந்த வகையில் ஆச்சார்யா திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும், விஜயை 65வது திரைப்படத்திலும் மற்றும் பாலிவுட்டில் ரன்வீர்சிங் உடன் சர்க்கஸ், சல்மான்கானுடன் ஒரு படம் என தொடர்ந்து இந்திய அளவில் பல்வேறு திரைப்படங்களில் தற்போது நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
ஆள் பார்ப்பதற்கு பூஜா ஹெக்டே செம்ம சூப்பராக இருந்தாலும் அவரது நடிப்பு அதைவிட பல மடங்கு சூப்பராக இருக்கிறது அதனை சமீபத்திய படங்களில் வெளிகாட்டி வந்த நிலையில் பாகுபலி பிரபாஸ் உடன் ராதேஷியம் படத்திலும் பூஜா ஹெக்டே நடித்து இருக்கிறார்.
இந்த படத்தின் சூட்டிங் காட்சிகளைப் பார்த்த பிரபாஸ் ஷாக் ஆகி உள்ளார் அதற்கு காரணம் கடந்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு இத்தாலியில் தொடங்கியது அப்போது சர்க்கஸ் காட்சிகளுக்காக உயரமான இடத்திலிருந்து டூப் இல்லாமல் பூஜா நடித்து அசத்தினார். அதை பார்த்து பிரபாஸ் ஆச்சரியபட்டார்.
அது போல பல்வேறு இடங்களில் ரொமான்ஸ், சென்டிமென்ட் காட்சிகளை பார்த்த நடிகர் பிரபாஸை நடிப்பில் என்னையே ஓவர் டேக் செய்து உள்ளாராம் அதனை பிரபாஸ் பார்த்து ஷாக் ஆனாராம்.
அந்த அளவிற்கு பூஜா ஹெக்டே அவரது ரோலில் பின்னி பெடல் எடுத்து உள்ளாராம். மேலும் நடிகை பூஜா ஹெக்டேவை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளை தெரிவித்தார் மேலும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளது இதனால் பூஜா ஹெக்டே தற்போது சந்தோஷத்தின் உச்சியில் தெரிவித்துள்ளார்.