நட்புக்காக ஒரு மண்டலம் விரதம் இருந்த பிரபல நடிகர்.! சினிமா உலகில் இப்படி ஒரு நட்பா.?

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித் ஆவார். இவர் தற்பொழுது உள்ள பெரும்பாலான இளைஞர்களின் ரோல் மாடலாக திகழ்கிறார் என கூறலாம். இவர் எவ்வித எதிர்பார்ப்புமின்றி ரசிகர்கள் மீது வைத்துள்ள அன்பினால் அனைவருக்கும் பிடித்தவராக திகழ்கிறார்.

இவர் சினிமா வாழ்வில் முதலில் படங்களில் விளம்பர நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகுதான் 1992இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் என் வீடு என் கணவர் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சிறு வேடத்தில் நடித்திருப்பார்.

இதனைத் தொடர்ந்து அமராவதி, ராஜாவின் பார்வையிலே, காதல் கோட்டை, நேசம், ராசி உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து வருகிறார்.இந்த வகையில் வாலி திரைப்படத்தின் போது அஜித்துக்கு ஆக்சிடென்ட் ஆகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

ajith and vivek

அப்பொழுது நடிகர் விவேக் 48 நாட்கள் விரதம் இருந்தாராம். அஜித்திற்கும் விவேக்கும் அப்படி ஒரு நட்பாக இருந்து வருகின்றன. தற்போது இந்த செய்தி பத்திரிக்கையாளர் ஒருவரால் அஜித் ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது எனவே விவேக்கை தலைமேல் தூக்கி வைத்த அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

Leave a Comment

Exit mobile version