தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் தனது 66 வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்குகிறார். மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜு தயாரிக்கிறார்.
வாரிசு படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்டப்பட பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.
வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது இதனை முன்னிட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன், சென்டிமென்ட், காமெடி என அனைத்தும் கலந்த திரைப்படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த சமயத்தில் படத்தின் கதை கூட இணையதளத்தில் லீக் ஆகிவிட்டதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து அவ்வபொழுது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் லீக் ஆகுவதால் படக்குழு மற்றும் விஜய் ஆகியோர்கள் செம கோபத்தில் இருக்கின்றனர். இதை கட்டுப்படுத்த பல்வேறு யுத்திகளை பட குழு வகுத்துதான் பார்க்கிறது.
ஆனாலும் புகைப்படங்கள் வெளியாகி தான் வருகிறது. இந்த நிலையில் நிலையில் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்து வரும் சரத்குமார் படபிடிப்பு தளத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படங்கள் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..