தமிழ் சினிமா உலகில் வேலைக்காரன், தனி ஒருவன், ஜெயம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனது திறமையை வெளி உலகத்திற்கு காட்டியவர் இயக்குனர் மோகன்ராஜா. இப்பொழுது தமிழை தாண்டி தெலுங்கிலும் படங்களை இயக்க ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் தெலுங்கு டாப் ஹீரோவான சிரஞ்சீவி வைத்து “காட்பாதர்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் கைகோர்த்து நயன்தாரா நடிக்கிறார் மேலும் சிரஞ்சீவியின் மகனும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அதேசமயம் இந்த படத்தை ராம்சரண் தயாரிக்கிறார்.
இந்த படம் மலையாளத்தில் வெளியான லூசிபர் திரைப்படத்தின் கதையை ரீமேக்காக உருவாகிறது அப்படி என்றால் இந்த படத்தில் சிரஞ்சீவியின் நடிப்பு மிரட்டும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் ஒரு கௌரவ கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சல்மான்கானை படக்குழு அணுகி உள்ளது.
அவரும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இருப்பினும் சல்மான்கானுக்கு 20 கோடி சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர் ராம்சரண் முனைப்பு காட்டி உள்ளார் ஆனால் அந்த பணத்தை சல்மான்கான் வாங்க மறுத்து விட்டார். இருப்பினும் விடாது ராம்சரண் அந்த பணத்தை நீங்கள் வாங்கும் படி கட்டாயப் படுத்தி உள்ளார்.
சல்மான் கான் ஒருகட்டத்தில் என்னுடைய படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க சொன்னால் நீங்கள் சம்பளம் வாங்குகிறார் என கேட்டுள்ளார் அப்புறம் நான் மட்டும் ஏன் சம்பளம் வாங்க வேண்டும் என கூறினார். அதன்பிறகு ராம் சரண் பணம் கொடுப்பதை விட்டு விட்டாராம். சல்மான்கானும், சிரஞ்சீவியும் இந்த படத்தில் இணைந்து நடிப்பது மிகப்பெரிய பிளஸ்ஸாக படக்குழு பார்க்கிறது.